• Sun. Dec 10th, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Aug 26, 2022

பாதாம் பூரி:

தேவையான பொருட்கள்
மைதா மாவு – 1 கப், சர்க்கரை – 3ஃ4 கப், உருக்கிய நெய் – 1ஃ4 கப், உலர்ந்த தேங்காய் துருவல் – 1ஃ2 கப், எண்ணெய் – பொரிப்பதற்கு, அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 1 கப், உப்பு – சுவைக்கேற்ப, ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன், கிராம்பு – 8-10

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும். இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்டி பூரில் போல் தேய்த்து பூரியை முக்கோண வடிவில் எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி). கடாயில் எண்ணெயை சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பொரித்து சுடச்சுட உள்ள பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும். அதன் மேல் துருவிய தேங்காயை தூவி அப்படியே சுவையுடன் அழகாக சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *