• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Aug 25, 2022

வெள்ளை குருமா:

தேவையான பொருட்கள்:
எண்ணெய் 2டீஸ்பூன், பிரியாணிஇலை 1, வெங்காயம் 1, தக்காளி 1, பட்டை 1, ஸ்டார் 1, ஏலக்காய் 2, லவங்கம் 2, கொத்தமல்லி ஒரு கைப்பிடி, கேரட் 50கிராம், பீன்ஸ் 50கிராம், பட்டாணி 20கிராம, ;உருளைக் கிழங்கு 3

அரைக்க வேண்டிய பொருட்கள்:
பச்சைமிளகாய் – 6மல்லி – 1ஸ்பூன்சோம்பு – 1ஸ்பூன்சீரகம் – 1ஸ்பூன்மிளகு – 1 ஸ்பூன்இஞ்சி – 5துண்டுபூண்டு – 10பல் பெரியவெங்காயம் – 1 தக்காளி – 1 தேங்காய் – 1ஃ4மூடி முந்திரி – 10 பால் – 1ஃ2 கப்

செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய்1ஸ்பூன் விட்டு, சோம்பு, சீரகம், மிளகு, பச்சைமிளகாய், மல்லி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும். தேங்காய்,முந்திரி, கசகசா,பால் ஆகியவற்றை தனியாக சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, ஸ்டார், பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு அரைத்த வைத்த பொருட்களை சேர்க்கவும். கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்க்கவும். உப்பும் சேர்க்கவும். தண்ணீர் தேவையான அளவுக்கு சேர்த்து கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் முந்திரி பால், விழுது சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான வெள்ளை குருமா ரெடி.