விஜய்சேதுபதியின் நடிப்பில் 2019-ம் ஆண்டே மாமனிதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மாமனிதன் திரைப்படம் வெளியாகாமல் காத்திருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
மாமனிதன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஆர்.கே.சுரேஷ் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து படம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக உள்ளதால்,மாமனிதன் படம் மே 6ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, படத்தின் இசைவெளியிட்டு விழா கோலாகலமாக புதுவையில் நடைபெற்றது. இந்நிலையில், மாமனிதன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமனிதன் திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். அதன்படி, மே 20-ம் தேதியில் இருந்து ஜூன் 24-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
