இளையராஜா குறித்து கடந்து சில நாட்களாக இணையத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் இளையராஜா நான் உன்னை நீங்க மாட்டேன் பாடலை தனது டூவிட்டர் பக்கத்தில் பாடி உள்ளார்.
டெல்லியில் உள்ள புளூகிராப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம், மோடியும் அம்பேத்கரும், சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.
இந்தப் புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் “அம்பேத்கர், நரேந்திர மோடி இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல; செயல்படுவதிலும் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதிகள். முத்தலாக் உள்ளிட்ட சட்டங்களின் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். மோடியின் செயல்பாடுகளை இப்போது அம்பேத்கர் கண்டால் பெருமைப்படுவார்…” என எழுதியிருந்தார்
இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜாவின் கருத்துகள் சமூகவலைத்தளத்தில் சர்சைகளை கிளம்பின.. சிலர் ஆதரித்தும்,சிலர் எதிர்கருத்துக்களையும் முன் வைத்தனர்.மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும், இளையராஜாவுக்கு தன் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு என்றும் , இளையராஜா மீது பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள் சிலர் இளையராஜா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டக வலியுறுத்தி வருகின்றனர்.
தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,
தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி நடித்த தளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே” என்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அசல் பாடல் வரிகளில் சில புதிதாக சில வரிகளை சேர்த்து மாற்றங்களைச் செய்து, பாடுவேன் உனக்காகவே… இந்த நாள் நன்னாள் என்று பாடு… என்னதான் இன்னும் உண்டு கூறு” என்று வரிகளைச் கூடுதலாக சேர்த்து பாடியிருக்கிறார்.
இளையராஜாவின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்தபாடல் வரிகள் மூலம் அவர் என்ன தான் சொல்லவருகிறார் என ரசிகர்கள் கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.
நான் உன்னை நீங்க மாட்டேன்’’ பாடல் மூலம் என்ன சொல்ல வருகிறார் இளையராஜா
