கடந்த சில தினங்களாக அவ்வப்போது எற்படும் மின் வெட்டு தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.ஒருமணி நேரத்திற்கு மேலாக மின் வெட்டு தொடரும்நிலைக்கு தமிழகம் தற்போது வந்துள்ளது. இந்த மின்வெட்டு தற்காலிகமானதா அல்லது மின் வெட்டு தொடர்ந்து தமிழகம் இருளில் முழ்குமா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. அரசு வந்தாலே மின்வெட்டு அதிகரிக்கும் என்பது கடந்த கால அனுபவம்.10 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க அட்சி நடைபெற்ற போது 1 மணி நேரத்திற்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டது. விவசாயம் உள்ளிட்ட பல தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அடுத்து வந்த தேர்தலில் தி.மு.க அரசின் தோல்விக்கு மின்வெட்டு மிக முக்கிய காரணமாக அமைந்தது.
கொரோனா காலத்தில் மந்தமாகஇருந்த பொருளாதாரம் தற்போது வேகம் எடுக்க துவங்கியுள்ளது.மேலும் மக்களின் அன்றாட மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே மின்சாரத்திற்கான தேவை பல மடங்கு கூடியுள்ளது.
ஏப்ரல் மாதத்துவக்கத்திலிருந்தே இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்வெட்டு அமலில் உள்ளது.இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது. உக்ரைன்- ரஷ்ய போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.நிலக்கரிக்கு உலகம் முழுவதுமே தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. .
ஒருபுறம் மின்வெட்டு என்றால் மறுபுறம் மின்சார கட்டணம் அதிகரிக்கும் என தெரிகிறது..இந்த மாத தொடக்கத்தில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.டிசம்பர் 2022 வரை கூடுதல் செலவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பதற்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது..
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கையில் கடும் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கான துவக்கமே மின்வெட்டிலிருந்து தான் துவங்கியது. தற்போது இந்தியாவிலும் ,குறிப்பாக தமிழக்திலும் மின்வெட்டு அதிகரிக்க துவங்கியிருப்பது பொருளாதார வீழ்ச்சியின் துவக்கமாக இருக்குமா . தமிழகத்தின் மின்வெட்டு கோடைகாலம் முடிந்ததும் சரிசெய்யப்படுமா அல்லது தமிழகம் இருளில் முழ்குமா ?
