புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு லட்சிய ஜனநாயக கட்சி அப்பகுதியில் பொதுமக்களின் நல் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இளைஞர் சமுதாயம் ஆலோசனைகளை செய்த பிறகு இலட்சிய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளராக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜீவா என்பவரை நியமனம் செய்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சியை வளர்ப்பதற்காக முடிவு செய்து இருந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லட்சிய ஜனநாயக கட்சி பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்ட ஜீவா கலந்து கொண்டார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தும் பொன்னாடைகளைப் போற்றியும் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில்,
புதுச்சேரியில் சமீபத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் தான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவரைப்போல் அவர் அம்மா லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுபோல் தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளதாகவும் எனவே சுமார் 4 லட்சம் பேர் சமீபத்தில் உறுப்பினராக இணைந்துள்ளதாகவும் கூறினார்.
அப்பொழுது அவர் பேசிக் கொண்டிருந்தபோது ஆலோசனைக் கூட்டம் எவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை வெளிநாட்டில் இருந்து சார்லஸ் மார்ட்டின் தொலைபேசி வாயிலாக வீடியோ காலில் இணைந்து தொண்டர்களிடம் பேசினார்.
அதனைத் தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு அவர் கூறிய பதில்,
சட்டம் ஒழுங்கு பழைய ஆட்சியாளர்கள் இருந்தபோது எவ்வாறு இருந்ததோ அது போல் தான் இருக்கிறது. பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை அப்படியே தான் இருக்கிறது. எந்த ஒரு புதிதான மாற்றமும் தெரியவில்லை ஆட்சியாளர் போக போக தான் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும் சட்ட ஒழுங்கு பழைய ஆட்சி எவ்வாறு இருந்ததோ அதுபோல்தான் தற்போதும் தொடர்கிறது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சி மக்கள் மத்தியில் வரவேற்பு எவ்வாறு உள்ளது எனவும் செய்தியாளர் கேட்டதற்கு அவர் கூறியது,
தற்போது இணையதளம் வாயிலாக மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நாட்டில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் பத்திரிக்கையாளர்களும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இணையதளத்தின் மூலமாக கடந்த 12 நாட்களாக இணைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டின் பெருசாக எதுவும் செய்யவில்லை புதுச்சேரி மாநிலத்தில் எங்களது நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் என்ன சொன்னார் அங்கு என்ன செய்து வருகிறார் என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கொத்து கொத்தாக லட்சிய ஜனநாயக கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைகிறார்கள் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனவும் இணையதளம் வாயிலாக அனைவரும் கவனமாக பார்த்து வருகிறார்கள்
தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசமாட்டேன் என்கிறார் எனவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகின்றனர் எனவும் இது குறித்து உங்கள் கருத்து என்ன?
சிஎம் நல்லவரா கெட்டவரா அரசியலில் என்ன பேச போகிறார் என்ன பண்ணப் போகிறார் தெரியாது பழைய கட்சி இரண்டு கட்சிகள் என்றால் நாங்கள் கூறி விடுவோம் இவர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார் அவர் வாய் திறந்தால் தான் எப்படி இருக்கும் என்று தெரியும் எப்படி பேச போகிறார் என்றும் இன்னும் ஒரு பாடம் கூட படித்துக் கொண்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன் பத்திரிக்கையாளரை நிச்சயமாக அவர் சந்திக்க வேண்டும் முதல்வராக இருந்தாலும் சரி பிரதமராக இருந்தாலும் சரி கவர்னராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி பத்திரிகையாளர்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் சந்தித்தால் தான் நாட்டில் நடப்பு என்னவென்று பத்திரிக்கையாளர் எடுத்துக் கூறுவார்கள் இது வந்து பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருக்கும் வரையும் சிஎம் வந்து கொஞ்சம் கஷ்டம்தான் அவர் சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கட்சியின் வேண்டுகோளாக இருக்கிறது எனவும் கூறினார்.
அதிமுகவின் முக்கிய புள்ளி விஜய் பாஸ்கர் தற்போது தவெக வில் இணைய உள்ளார் இது பற்றி உங்கள் கருத்து என்ன?
அதிமுகவில் முக்கிய புள்ளி விஜயபாஸ்கர் மட்டுமல்ல இங்கு இருக்கும் நிறைய முக்கிய புள்ளிகள் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள் அதிமுகவின் தலைமை எனக்குத் தெரிந்து எடப்பாடி யார் அவர்கள் பொதுச் செயலாளர் இதுபோன்ற போக்கை அவர்கள் எடுத்திருக்கக் கூடாது கட்சியில் இருப்பவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ அனைவரையும் அரவணைத்து இருக்க வேண்டும் அனைவரையும் விட்டிருக்கக் கூடாது ஆரம்பத்திலே அவர் தவறு செய்து விட்டார் என்று இப்ப நினைக்கிறார்கள் எல்லோரும் இப்பவும் இருப்பவர்களை கூப்பிட்டு பேச வேண்டும் பொதுச்செயலாளர் பதவி அதிமுக கட்சி மட்டுமே போதும் என்ற ஒரு எண்ணத்தில் இருப்பது போல் தெரிகிறது. இது நாளடைவில் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஒரு பாதாளக் குழியை தள்ளக்கூடிய செயலாகவும் நாங்கள் பார்க்கிறோம் என்றார்.




