• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அமித்ஷா வருகை ஒட்டி ஆலோசனை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Jun 6, 2025

மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் வனிதா இனிகோ திவ்யன்,,மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் , விமான நிலைய மத்திய தொழிலில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் விஸ்வநாதன், மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக தென்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைகையையொட்டி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை இரவு 8.30 மணி அளவில் அமித்ஷா மதுரை வருகிறார். பின்னர் சிந்தாமணி சுற்றுச்சாலையில் உள்ள தனியார் ஓய்வு விடுதியில் இரவு தங்குகிறார்.

(08.06.25) எட்டாம் தேதி காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்தை முடித்து பின்பு ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.