



சாத்தூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி தடுப்பு என அணை கன்னிகா மதகு மற்றும் வைப்பாறு வடிநில பகுதி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.


காவிரி குண்டாறு பாலாறு விவசாயிகள் சங்கத் மாநிலதலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். விருதுநகர் வைப்பாரு பாசனப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எழுத்தாளர் லட்சுமண பெருமாள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.


