


புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆலங்குளம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரின் சாக்கு பையை சோதனையிட்டதில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரை விசாரணை செய்ததில் ராஜபாளையம் அருகே உள்ள செல்லம்பட்டி சேர்ந்த கந்தசாமி (வயது 45 )என்பது தெரிய வந்தது .உடனடியாக போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.


