• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் பேரூர் திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!

ByKalamegam Viswanathan

Oct 16, 2023

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வாடிப்பட்டி தனியார் மகாலில்நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் முன்னாள் பேரூராட்சி செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய போது எதிர்வரும் இளைஞரணி மாநாட்டை திறம்பட நடத்திட மதுரை புறநகர் வடக்குமாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் இளைஞர் அணி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டினார். இதில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திக், பேரூர் துணைச்செயலாளர் ஜெயகாந்தன், இளைஞர் அணி வினோத் மற்றும் திமுக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.