• Wed. Jan 22nd, 2025

முள்ளிபள்ளத்தில் வ.உ.சி பிறந்த தின விழா..!

ByKalamegam Viswanathan

Sep 5, 2023

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சங்கக் கட்டிடத்தில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் 152 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு உறவின்முறை சங்கத் தலைவர் மருத வீரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானசேகரன் பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முருகன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர். சங்கர் தாசன் விவேக் மதன் முனியாண்டி மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வ. உ. சி. திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சக்கரை பொங்கல் வழங்கினார்கள்.