சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்டமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு உள்ளது. இந்த இடங்களில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற உறுப்புக் கல்லூரிகள் அனைத்து கல்லூரிகளும் இந்த இடங்கள் உள்ளடங்கியுள்ளது.
இந்த ஆண்டு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 83 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.