• Thu. Apr 25th, 2024

தேனியில் கண்ணகிக்கு கோயில் கட்டும் பணி தொடக்கம்!..

By

Aug 22, 2021

தேனி அருகே கண்ணகிக்கு நீதி கோயில் கட்டுவதற்கு வேலை பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிலப்பதிகாரத்தின் நாயகியாகவும், கற்புக்கரசியாகவும், தற்போது வரை பெண்களின் காவல் தெய்வமாக நின்று நீதி வழங்கி வருபவள் கண்ணகி.

தனது கணவன் கோவலுனுக்கு மதுரை மன்னன் தவறாக நீதி மதுரையையே தீக்கிரையாக்கியாக்கிய பத்தினி தெய்வமாக போற்றப்படுகிறார். தனது கணவனுக்கு தவறாக நீதி வழங்கிய மதுரை மன்னனையும், மதுரையையும் சாபத்தால் எரித்துவிட்டு கோபத்துடன் வான் வழியாகச் சென்று,
தேனி மாவட்டம் கேரளா எல்லைப் பகுதியான பளியன் குடிசைப் பகுதியில் கண்ணகி சிலையாக மாறியதாக வரலாறு கூறுகிறது.

இக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை வரும் சித்ரா பௌர்ணமி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலுக்கு சென்று வர கேரள அரசிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் கோவில் மலை மீது அமைந்துள்ளதாலும்,
ஒரு நாள் திருவிழா என்பதால் பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருவதில் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆன்மிக சிந்தனையாளர் மாரிஸ் என்பவர் கண்ணகிக்கு கோவில் கட்ட கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று ஆவணி மாதம் பௌர்ணமி நாளில், தனது சொந்த நிலத்தில் கண்ணகிக்கு நீதி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கினார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *