• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மக்களே உஷார் ! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!..

By

Aug 23, 2021

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.