ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தொகுதி அளவில் இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் 20.01.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜா லாட்ஜ்-ல் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமையில் தொகுதி இயக்க சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜ்மோகன் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பெரியசாமி, நகர் காங்கிரஸ் தலைவர் பஷ்சிராஜா வன்னியராஜ், காளிதாஸ், ஜெயராமன், சேதுராமன், பாலகுருநாதன், முருகராஜ், பாஸ்கர், மாவட்ட இலக்கிய அணி காங்கிரஸ் தலைவர் சுந்தரம், தமிழ்ச்செல்வன், ஜெயக்குமார், லட்சுமணன், சந்திரசேகர், ராஜகோபால், கோடையிடி முருகன், மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.