• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பழமையான முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

ByP.Thangapandi

Jun 26, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழதிருமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான முத்துமாரியம்மன் கோவில்12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.,

இதில் கணபதி ஹோமம், கோமாதா பூஜை, மகா பூர்ணாஹுதி ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள் மேள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,

இதற்கு முன்னதாக கிராமத்தில் உள்ள பெண்கள் திருவாச்சியம், மஞ்சள், குங்குமம், பழங்கள், காய்கறிகள், ஆடைகள், வெள்ளி கொலுசு, குத்துவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு செலுத்தினர்.,

தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது., பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.,