• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி..,

BySeenu

Jun 26, 2026

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியாவில் நடைபெற உள்ளது.

36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொழில்துறை கண்காட்சி கோவையில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஆறு முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகின்றன.

இந்த நிகழ்வு, தென்னிந்தியாவில் உள்ள உணவு வணிக நிறுவனங்களுக்கு, உணவு பதப்படுத்துதல், பேக்கரி, உணவு உற்பத்தி இயந்திரங்கள், பேக்கேஜிங் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உருவாகி வரும் நவீன தொழில்நுட்பங்களையும் புதுமைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் அமைய உள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் கூறுகையில் “இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், இந்திய மசாலா வாரியம், தேசிய மஞ்சள் வாரியம் மற்றும் பல்வேறு முன்னணி தொழில்துறை அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும். இந்தக் கண்காட்சியில், 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகதெரிவித்தார்.

35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்புகளும் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்

இந்தக் கண்காட்சியில், 18 வயதுக்கு மேற்பட்ட தொழில்துறை பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மாணவர்களுக்கு ஜூலை 3-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது