• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோரிப்பாளையம் தர்காவில் ஆக.30-ல் பிரம்மாண்ட சந்தனக்கூடு விழா..,

ByKalamegam Viswanathan

Aug 22, 2026

மதுரையின் புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 11.55 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி தர்கா மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கோரிப்பாளையம் தர்கா மதுரையின் பழமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த தர்கா, ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமின்றி மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நடைபெறும் உரூஸ் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உரூஸ் விழாவின் முக்கிய அம்சமாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தர்காவை சென்றடையும். பின்னர் சந்தனம் பூசும் வைபவம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம். மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வதால், இந்த விழா மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு வைபவம் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 11.55 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர உள்ளதால், கோரிப்பாளையம் பகுதி திருவிழா களைகட்ட உள்ளது.