• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

*இரவோடு இரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் *

Byமதி

Nov 25, 2021

மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி கான்ரட் கொங்கல் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்நிலையில், மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திடீரென திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று இரவோடு இரவாக காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.