வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிறந்த நினைவுத்திறனுக்காக இந்திய சாதனை புத்தகத்தில் (Indian Book of Records) இடம்பிடித்த சிறுவன் டி.சந்த்ரேஷ்-யை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் பாராட்டி, வாழ்த்தினார்.
