• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு கை குலுக்கி வாழ்த்து கூறிய, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்

ByG.Suresh

Apr 11, 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி. ரோட்டில் ஈதுகா மைதானத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். அதன் பின்பு ஒருவரை ஒருவர் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர். தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் பனங்குடி சேவியர் தாஸ் வாக்கு சேகரித்தார். அதன் பின்பு அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரமும் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். அதன் பின்பு அங்கிருந்து புறப்பட்டு செல்லும் பொழுது அதிமுக வேட்பாளர் பனங்குடி சேவியர் தாஸ் கையை பிடித்து குலுக்கி வெற்றி பெற கார்த்திக் சிதம்பரம் வாழ்த்து தெரிவித்து சென்றார்.