கர்நாடக காங்கிரஸ் கட்சியில், பிரதமர் நரேந்திர மோடியை படிப்பறிவு இல்லாதவர் என கன்னடத்தில் டுவீட் செய்தனர். இது கன்னட அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.
எனவே இதற்கு பதில் அளிக்கும் வகையில், கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கடீல் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்தி யார்? போதைக்கு அடிமையானவர் மற்றும் போதைப்பொருள் விற்பவர் என்ற தகவல்கள் ஊடகங்களில் வந்ததுள்ளது. உங்களால் ஒரு கட்சியை கூட நடத்த முடியாது என கூறினார்.

நளின்குமார் கடீலின் இந்த மோசமான கருத்துக்களுக்குப் பிறகு, டி.கே.சிவகுமார் மீண்டும் டுவிட்டரில் தவறான கருத்துக்களுக்காக பா.ஜ.க.விடம் மன்னிப்பு கோரினார். அவர் டுவிட்டரில், நேற்றே நான் சொன்னேன், நாங்கள் அரசியலில் எங்கள் எதிரிகளுக்கு கூட மரியாதைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். இதற்கு பா.ஜ.க என்னுடன் உடன்படும் என்று நம்புகிறேன், மேலும் ராகுல் காந்திக்கு எதிரான கருத்துக்களை பதிந்த மாநிலத் தலைவரின் தவறான மற்றும் சட்டவிரோத கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.