• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

பாலமேடு அருகே பொன்னுலிங்கம்மாள் இயன் முறை மருத்துவக்கல்லூரி திறப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Oct 27, 2026

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டியில் 3 ஏக்கரில் அமைந்துள்ள பொன்னுலிங்கம்மாள் இயன்முறை பிசியோ தெரபி மருத்துவக்கல்லூரி கட்டிட திறப்பு விழா தவெக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற MLA கருப்பையா ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அமைந்துள்ள சல்ஜரி கட்டிடடத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணித்தார்,

தவெக அரசு கிராமப்புற மாணவர்களின் நலனை அக்கறையுடன் எதிர்கொண்டு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும்

இப்பகுதி மாணவர்கள் பேருந்து மூலம் மதுரை சென்று தான் படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது இயற்கை எழில் சூழ்ந்த மலையடி வாழ் பகுதியான மறவபட்டியில் சுகாதார வசதியுடன் மருத்துவக் கல்லூரி கிடைத்துள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் நிறைவான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்று எம் எல் ஏ கூறினார்