மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம் தெற்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விக்னேஸ்வரபூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

சக்தி மாரியம்மன் யாகசாலைபூஜை, வருண,சுதர்சன, ஹோமங்கள், கன்னிகா,தனலட்சுமி பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாஹீதி நடைபெற்ற நிலையில் புனித நீர் தீர்த்த குடங்களுடன் அர்ச்சகர்கள் கோவிலை சுற்றி வளம் வந்தனர்.

காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,அலங்கார ஆராதனைகள் நடந்தன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சக்தி மாரியம்மன் தரிசனம் செய்து சென்றனர்.





