விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உப்பத்தூர் என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான டால்மியா சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது.இந்த ஆலைக்கு செல்லக்கூடிய சாலையில் தனியார் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

மேலும் சாலையில் கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகப்படியான லோடுகளை ஏற்றி செல்வதால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் லாரிகளை நிறுத்தி வைப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அப்பகுதி மக்கள் ஆலையில் இருந்து வெளியே வரும் மாசினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்று தெரிவித்து வருகின்றனர்.




