• Wed. Dec 11th, 2024

இந்தி மொழியை காகத்தோடு ஒப்பீடும் -அமைச்சர் சேகர்பாபு

ByA.Tamilselvan

May 15, 2022

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு இந்தி திணிப்புக்கு எதிராக இந்தியை காகத்தின்எச்சத்தோடுபேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்சா இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் பேசினார். அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.தமிழகத்தில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வடசென்னை கொருக்குப்பேட்டையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:
கடந்த ஒராண்டுகால்த்தில். ஐந்தாண்டு நிறைவடைவதற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 563 வாக்குறுதிகளில் 363 வாக்குறுதிகள் முதல் ஓராண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.வாக்குறுதிகள் நிறைவேற்ப்படவில்லை என சொல்லும் எதிர்கட்சிகள் இதனை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
மேலும்பேசியஅவர் தமிழகத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநரால் இந்தி திணிப்பு கையில் எடுக்கப்பட்டுள்ளது. காகம் தலைக்குமேல் எச்சம் இடுவதையே எதிர்க்கிறோமே தவிர காகத்தை எதிர்க்கவில்லை என்றார். மேலும் நாங்கள் ஏற்றும் தீர்மானத்தை கவர்னர் ஏற்காத போது நாங்கள் ஏன் அவரை ஏற்க வேண்டும் என்றார்.