• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு..,

ByP.Thangapandi

Feb 9, 2026

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்று வருகின்றது.,

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.,

இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை யாற்றினார்.,

இதில் நீங்கள் எல்லோரும் ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் சுகப்பிரசவத்துடன் பெற்றெடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளும் நீங்களும் பல்லாண்டு இந்த உலகத்தில் வாழ இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல அறிவையும், நிறைவான செல்வத்தையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்குவார் என வாழ்த்தினார்.,

தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு சேலையுடன் வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.,