• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சரவண பொய்கையில் தண்ணீரில் மூழ்கி இறந்த கல்லூரி மாணவன்..,

ByKalamegam Viswanathan

Mar 10, 2026

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் நேற்று மாலை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு மாணவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதனால் அந்தமாணவன் ஆழமான பகுதியில் மீண்டு வருவதற்கு எவ்வளோ முயற்சி செய்து போராடி உள்ளார். ஆனால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதை கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த நிலையில் தகவலறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு வீரர்கள் விரைந்து சென்று சரவணப்பொய்கையில் 2 மணி நேரத்திற்கு மேலாக இறந்து போன தேடி தண்ணீரில் இருந்துபிணத்தை வெளியே கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மதுரைஅழகப்பாநகர்முத்துப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்த பாலா சந்துரு (வயது 17) என்று தெரிந்தது.

மேலும் இவர் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் மதுரா கல்லூரியில் உள்ள படித்து வந்த நிலையில் தனது நண்பர்களுடன்குளிக்க வந்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனது தெரிய வந்தது. மேலும் திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.