திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியல் உண்டியல் கணிக்கையாக செலுத்திய ரூபாய் 26 லட்சத்து 79 ஆயிரம் பணமாகவும் 183 கிராம் தங்கம். 1940 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் சுரேஷ், அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள். ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வகையில் 183 கிராம் தங்கம். 1940 கிராம் வெள்ளி மற்றும் பணமாக ரூபாய் 26 லட்சத்து 79 ஆயிரத்து 122 ரூபாய் கிடைக்கப் பெற்றது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் தக்கார் பிரதிநிதியாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கண்காணிப்பாளர் ஆறுமுகம், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வர் இளவரசி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் அ.சுமதி, ஜெ.சத்தியசீலன், அலுவலக கண்காணிப்பாளர் ரஞ்சனி, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் அலுவலக பேஷ்கார்கள் புகழேந்தி, நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.