மதுரை விமான நிலையத்தில் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் அவர்கள் வருகை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வந்த அதிமுகவினர் முக்கிய பிரமுகர் செல்லும் வழியில் ஓரமாக நிற்கச் சொன்ன காவல் ஆய்வாளர் பார்த்திபனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனால் அரை மணி நேரம் விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஐ வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசார் உடன் வாக்குவாதம் செய்தனர். அரைமணி நேரம் போலீசார் கூறியதை ஏற்க மறுத்து, மதுரை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முருகேசன் மற்றும் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் போலீசாரிடம் தகராறு செய்தனர். இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.