
மதுரை திருநகரில் சமூக ஆர்வலரும்., விலங்கு நல ஆர்வலரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருநகர் 7 வது பேருந்து நிறுத்தத்தை சேர்ந்தவர் வித்தோஸ் குமார்-(21)., இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரி எம்.எஸ்.ஸி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும் வித்தோஸ் குமார் சிறு வயது முதலே சமூக நல ஆர்வலராகவும்., விலங்குநல ஆர்வலராகவும் பணியாற்றி வருகிறார். திருநகர் பகுதியில் உள்ள சாரா முதியோர் இல்லத்தில் பகுதி நேர வேலையாக இரவு நேரங்களில் தங்கி இருந்து முதியோர்களை பராமரித்து வருபவர் ஆவார்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு அருகில் இருந்த குடியிருப்புக்குள் பாம்பு ஒன்று புகுந்ததாக வந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக்குள் இருந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டு நள்ளிரவு அதாவது 13 ஆம் தேதி முதியோர் இல்லம் முன்பு தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணி அளவில் முதியோர் இல்லம் முன்பு நிறுத்தி இருந்த வித்தோஸ் குமார் இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து கல்லூரிக்கு செல்வதற்கு எழுந்து பார்த்த விதோஷ்குமாருக்கு தான் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக முதியோர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது மூன்று பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தௌ;ளத் தெளிவாக பதிவாகி இருந்தது.
இது குறித்து திருநகர் காவல் நிலையத்தில் வித்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள் யார்.? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் அனைத்து சமூக வலைதள பக்கத்திலும் பதிவாகி வைரல் ஆகி வருகிறது.
