சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மூன்று வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 25ஆம் தேதி, வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன் நடித்த மாநாடு வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியான முதல் 3 வாரங்களில் சுமார் 53 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக விநியோக வியாபாரத்தில் தொடர்புடைய Rock Fort நிறுவனத்தின் Creative Producer ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
