• Fri. Apr 19th, 2024

காகிதமில்லா அலுவலக திட்டத்தில் கோவை போலீஸ் முதலிடம் ..

Byகாயத்ரி

Mar 5, 2022

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளது. இதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த செலவை குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம் ஆவணங்களை அனுப்பி இ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

மேலும் இந்த திட்டத்தை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வருகின்றன. போலீஸாரின் அலுவலக பயன்பாட்டிற்கான கோப்புகள் அனைத்தையும் இனி கணினி மூலமாகவே அனுப்ப மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் துறைகளுக்கு அரசு சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அலுவலக கோப்புகளை ஆஃபீஸ் மூலம் அனுப்பி வைத்து மாநில அளவில் கோவை மாவட்டம் போலீசார் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதற்காக சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து கோவை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் பிரதீப் குமாருக்கு இமெயிலில் பாராட்டு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவின்பேரில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வழிகாட்டுதலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் விருது பெற காரணமாக இருந்த பணியாளர்களை பாராட்டி பரிசு வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *