நீலகிரி, கோவை மாவட்ட தேசிய மாணவர் படை (என். சி. சி. ) மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம், ஊட்டி அருகே கேத்தியில் நடைபெற்றது. முகாமுக்கு கமாண்டர் கர்னல் சீனிவாசன் தலைமை தாங்கினார். முகாமில் என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி கையாளுதல், ராணுவ நடைப்பயிற்சி, பேரிடர் காலங்களில் மீட்பு பயிற்சி போன்றவை குறித்து என்.சி.சி. அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து தீயணைப்புத் துறை மூலம் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது, தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்துவது, பேரிடர் காலங்களில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீயை அணைப்பது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் என்.சி.சி. மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.