• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

முதன்முறையாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா..

BySeenu

May 24, 2026

கோவையில் முதன்முறையாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவையில் முதன்முறையாக இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் சுமார் 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் வரவேற்புரையாற்றிய இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன், பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான வரவேற்பும் தேவையும் அதிகரித்து வருவதாகவும், Articleship எனப்படும் நடைமுறைப் பயிற்சி திறமையான தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்களுக்கான Campus Placement வாய்ப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறினார்.

AI, Machine Learning, Blockchain, Cloud Computing மற்றும் Data Analytics போன்ற தொழில்நுட்பங்களை இளம் பட்டயக் கணக்காளர்கள் கற்றுக்கொள்வது காலத்தின் அவசியம் என்றும், தொழில்நுட்பத்தை அச்சமாக பார்க்காமல் புதிய வாய்ப்பாக அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் ராஜேஷ் , பிராந்திய கவுன்சில் உறுப்பினர், A. V. அருண், பிராந்திய கவுன்சில் உறுப்பினர், மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.