• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சத்யராஜுடன் இணைந்து நடிப்பது ஜாலியானது – ராதிகா

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படம்வரவேற்பை பெற்றாலும் உடனடியாக புதிய பட வாய்ப்புக்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு அமையவில்லை இதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார்ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜும், ராதிகாவும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் படம் இது.. தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராதிகா. மேலும் சத்யராஜுடன் நடிப்பது என்றால் எப்போதுமே ஜாலியான உரையாடலும் சந்தோசமுமாக இருக்கும், புதுவருடத்தை இப்படி துவங்குவதும் ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ராதிகா.