• Fri. Apr 26th, 2024

சென்னையில் நடைபெற்ற 19 வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டும், அவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது.


தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது, Online film buff விருது, Amitabh Bacchan youth icon விருது என மொத்தம் ஐந்து விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.

19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 2021 டிசம்பர் 30 ம் தேதி தொடங்கி 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடைபெற்று வந்தது விழாவின் இறுதி நாளான நேற்று(6.1.2022)
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது திரையிடப்பட்ட தமிழ் படங்களின் போட்டி பிரிவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.


இந்தப் படத்தை இயக்குநர் வசந்த் சாய் தயாரித்து, எழுதி, இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு பரிசுத் தொகையாக இயக்குநருக்கு 2 லட்சம் ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்சம் ரூபாயும்வழங்கப்பட்டது.

இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘தேன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. கணேஷ் விநாயகன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு பரிசுத் தொகையாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சரி சமமாக தலா 50,000 ரூபாய் அளிக்கப்பட்டது.


இன்னுமொரு இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கியிருந்த ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.


நடுவர்களின் சிறப்புப் பரிசாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்திருந்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.இந்த வருடத்திய சினிமா சாதனையாளர் விருது இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவுக்கு வழங்கப்பட்டது.


அமிதாப்பச்சன் பெயரில் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த இளம் சாதனையாளருக்கான விருது பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *