நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10% இடங்களை ஒதுக்கி மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்த நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தள்ளிவைக்கப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி மருத்துவர்கள் கடந்த மாதம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினராக கருதப்படுவர் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த டிசம்பர் 31-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட 2 நீதிபதிகள் அமர்வு தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான சுருக்கமான வாதத்தை வெள்ளிக்கிழமை (இன்று) காலையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்யுமாறு மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அவர்கள் இடைக்கால உத்தரவிட்டனர்.
மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, அரசியல் சாசனத்தின்படி அனுமதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதேபோல், நடப்பாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வை நடத்திக் கொள்ள அனுமதியளித்த நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வரையறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிஷன்களின் பரிந்துரைகள் குறித்து மார்ச் இறுதி வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்..
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]