• Fri. Jan 24th, 2025

கடலூரில் மாணவர் சங்கத்தின் தூய்மைப் பணி

Byவிஷா

Dec 5, 2024

கடலூர் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீர் புகுந்த வீடுகளை வாலிபர் சங்கம் மற்றம் மாணவர் சங்க அமைப்பினர் இணைந்து தூய்மைப்பணி மேற்கொண்டது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. வீடுகள் சேரும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. வீட்டில் ஓரளவிற்கு தண்ணீர் வடிந்தாலும் சகதியாக உள்ளதால் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் நேற்று கடலூர் அருகே உள்ள குண்டுஉப்பலவாடி பூந்தென்றல் நகரில் தென் பெண்ணை ஆற்றின் வெள்ள நீர் மணலுடன், சேறும் சகதியுமாக உள்ள வீடுகள் மற்றும் தெருக்களிலும், தண்ணீர் வடியாத பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் வீடுகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துதல், சகதியை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்று தூய்மை பணி மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் தூய்மை செய்யப்பட்டது.