• Fri. Apr 19th, 2024

உ.பி சட்டப்பேரவை தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ளது.

இதுவரை 403 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 111 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், 57 தொகுதிகளுக்கான 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த ஐம்பத்தி ஏழு தொகுதிகளில் 676 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் இந்த தொகுதிகளில் 2.14 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்க உள்ள கோரக்பூர் தொகுதியும் இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அவருக்கு எதிராக சமாஜ்வாடி தரப்பில் மறைந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர தத் சுற்றுலாவின் மனைவி போட்டியிடுகிறார்.
மேலும் இன்று நடைபெறும் 57 தொகுதிகளில் 11 தொகுதிகள் தனித் தொகுதிகள் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 57 தொகுதிகளில் நாற்பத்தி ஆறு தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் 6ம் கட்டமாக நடைபெறும் 57 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *