• Thu. Apr 18th, 2024

மதுரை அலங்காநல்லூர் காந்திகிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

ByKalamegam Viswanathan

Apr 30, 2023

அலங்காநல்லூர் காந்திகிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதிக்கு பாதை வசதிகள் ஏதும் செய்து தராமல் இருந்து வந்த நிலையில் அலங்காநல்லூருக்கு செல்ல வேண்டுமென்றால் 3 கிலோ மீட்டர் கடந்து தான் வர வேண்டி உள்ளது இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதியில் ஆய்வு செய்து பட்டா இடத்தை தேர்வு செய்தார் இடத்தின் உரிமையாளரிடம் நேரடியாக சென்று தங்களிடத்தை கிராம பாதைக்காக இடம் வழங்க வேண்டும் என்றும் தங்களுக்கு மாற்று இடம் தருவதாக உறுதி கூறிய நிலையில் அதை ஏற்றுக் கொண்ட அவர்கள் இடம் தருவதாக கூறி காலதாமதம் ஏற்படுத்தி வந்தனர் இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ள நிலையில் ஆணையத்தின் சார்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது நோட்டீசை பெற்றுக் கொண்ட ஊராட்சி நிர்வாகம் நேரில் சென்று விளக்கமும் அளித்தனர் தொடர்ந்து ஆணையத்தின் சார்பாக அரசு அதிகாரிகளுக்கு இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து வழங்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது பாதைக்கான இடத்தினை கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தேர்வு செய்து வேலைகளிலும் இறங்கி உள்ளனர் ஆனால் அப்பகுதியில் அந்த இடத்தில் பிளாட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலங்காநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் , ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் கிராமத்திற்கு பாதை ஒதுக்கி நடந்து செல்ல விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது இந்த சாலை மறியலால் அலங்காநல்லூர் தனிச்சியம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *