• Thu. Mar 28th, 2024

மதுரை அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சோகம்

ByKalamegam Viswanathan

Apr 30, 2023

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் விருமாயி. இவர்களது மகன் கணேசன், இவர் கட்டிட கூலி தொழில் செய்து வருகிறார் .இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று இரவு கட்டிட வேலை முடித்து தனது பண்ணியான் கிராமத்தில் உள்ள மந்தையில் குடிநீர் தொட்டி அருகில் நூறு அடி ஆழ மிகப் பழமையான பாழடைந்த கிணற்றில் மேல் பகுதியில் அமர்ந்திருந்த போது தவறி கிணற்றுக்குள் திடீரென விழுந்து விட்டார். இதனை அறிந்த, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் விழுந்த கணேசன் உயிருடன்மீட்க எவ்வளவோ முயற்சித்தம் மீட்க முடியவில்லை. உடனடியாக, அருகில் உள்ள சோழவந்தான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் தீயணைப்புத்துறை அதிகாரி பசும்பொன் தலைமையில் தீயணைப்பு துறை அலுவலர்கள் இரவு கிணற்றில் இறங்கி கணேசனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


சுமார் 11 மணியில் அளவில் தேடும் பணியை ஆரம்பித்த தீயணைப்பு துணையினருக்கு கணேசனின் உடல் கிடைப்பதில் மிகவும் சவாலானதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, கணேசனின் உடலை மீட்பதற்காக தனியார் உதவியை நாட துவங்கினர். இதனை அடுத்து, கிணற்றில் இறங்கி வேலை பார்க்கும் தனியார் தொழிலாளர்களை வரவழைத்து அவர்கள் மூலம் ஆக்சன் கவசம் பொருத்தி கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியை செய்தனர். சுமார் ஆறு மணி நேர தேர்தலுக்குப் பிறகு இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் கணேசனின் பெற்றோர்கள் உறவினர்கள் கணேசன் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. இதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த கிணறு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலேயே உள்ளது . பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தும் கிணற்றுக்கு அருகில் பாதுகாப்பு சுவர் எழுப்பவோ அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்யவோ அரசு முன்வராத நிலையில், நேற்று இரவு அநியாயமாக இளைஞரின் உயிர் பரிபோனது.ஆகையால், இதனை கருத்தில் கொண்டு அவசர மாக ,
மாவட்ட நிர்வாகம் இந்த கிணற்றை சுற்றி ஒரு ஆள்மட்ட உயரத்திற்கு சுற்றுச் சுவர்எழுப்ப வேண்டும். அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றும் அருகிலேயே குடிநீர் தொட்டி சிறுவர்கள் விளையாடும் இடம் ஆகியவை இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், கிணற்றின் உயரம் குறைவாக இருப்பதால் சிறுவர்கள் எட்டிப் பார்த்தாலே கிணற்றுக்குள் விழும் அபாயம் இருப்பதாகவும் அச்சத்துடன் தெரிவித்தனர். ஆகையால், ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிணற்றை சுற்றி சுற்றுச் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *