அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் செயல்பட்ட போது திட்ட மதிப்பீட்டு பலகை வைக்காமல், 11 பணிகள் செய்யாமலே பணிகள் செய்ததாக 18 லட்ச ரூபாய் செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்ட போது திட்ட மதிப்பீட்டு பலகை வைக்காமல் 11 பணிகள் செய்யாமல் செய்ததாக 18 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தேனி -பெரியகுளம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடிக்கப்பட்டு புதிய அலுவலகம் கட்டும்பணி நடைபெற்ற போது அரண்மனை புதூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டது.
அப்போது அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் அனைத்து விதமான வசதிகளும் இருந்தது.
ஆனால் அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்திற்கு கழிப்பிட வசதிகள், வர்ண பூசுதல், மின்சாரம், மேற்கூரை, உள்ளிட்ட 11 பணிகள் செய்யாமலே செய்ததாக 18 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டு பலகைகள் வைக்காமல் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
எனவே தேனி மாவட்ட நிர்வாகம் முறைகேடு செய்த ஒப்பந்ததாரர் மற்றும் சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.