• Tue. Dec 10th, 2024

டாஸ்மாக் கடை திறக்க ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

ByJeisriRam

Nov 7, 2024

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சடையால்பட்டி, வாடிப்பட்டி, போடேந்திரபுரம், உப்புக்கோட்டை ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

டாஸ்மாக் கடை திறந்தால் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தேனி மாவட்டம், போடேந்திரபுரம், உப்புக்கோட்டை மெயின் ரோடு, சடையால்பட்டி அருகில் மாநில நெடுஞ்சாலையில் 225 மீட்டர் தள்ளிதான் மதுபான கடை வைக்க வேண்டும் என மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதிகாரமிக்கவர்கள் தூண்டுதலின் பேரில் போக்குவரத்து நெரிசலான, விபத்து அதிகம் ஏற்படக்கூடிய இடத்தில் மற்றும் சாதி கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ள கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை (கடை எண் 8527) திறப்பதற்கு முயற்சிகள் செய்து ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே பல்வேறு பிரச்சனைகள் உள்ள இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க அனுமதிக்க கூடாது என்று கிராம மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஷஜீவனாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கடை திறக்க ஏற்பாடு செய்தால் சாலை மறியல் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்பதை கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.