17 ஆதி திராவிடர்களுக்கு சொந்தமான இடத்தை 3 நபர்கள் ஆக்கிமிரப்பு செய்து வெடிகுண்டுகள் பேசி கொன்றுவிடும் என கொலை மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, டி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 17 ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை 3 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து அவர்களை வெடிகுண்டுகள் வீசி கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தேக்கம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட சர்வே எண் 83/15 நிலமானது. 1968 டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் காளிப்பன் மகன் பவளமுத்து என்பவரிடம் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் கிரயம் செய்துள்ளார்.
பின்னர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 17 நபர்களுக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வீடு கட்டியவர்கள், வீட்டுமனை பட்டா வாங்கி அனுபவித்து வருகின்றனர்.
தற்பொழுது இருளாண்டி, ஆண்டிச்சாமி, வழக்கறிஞர் சுரேஷ் கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி துணையோடு நிலத்தை ஆக்கிரப்பு செய்து வைத்துக் கொண்டு 17 ஆதிதிராவிட மக்களையும் உங்களை வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டி தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஷஜீவனா புகார் தெரிவித்தனர்.