தமிழகம் முழுவதும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று சி.ஐ.டியு தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ882 வழங்கப்படுவதில்லை. இதில் பாதி அளவிலான தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் ஊதியத்தை உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று முதல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.882 வழங்கப்படுவதில்லை. இதில் பாதி அளவிலான தொகையை மட்டுமே அவர்கள் ஊதியமாக பெற்று வருகின்றனர். சொந்த ஊரில் பணியிடம் இருந்தாலும், அங்கு பணியமர்த்தாமல் வேறு இடத்தில் நியமனம் செய்யப்படுகிறது.
அதே போல் வசூல் குறைந்தால் இடைநீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில்நுட்பப் பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லை. அதே போல் பேருந்து உதிரிப் பாகங்கள் இல்லை. ஆனால், இதுபோன்ற காரணங்களை மறைத்து, ஊழியர்கள் மீது குற்றம்சாட்டி இடைநீக்கம் செய்து விடுகின்றனர். பயணச்சீட்டு கருவிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பினும் அவற்றை சரி செய்யாமல் பேட்டாவை குறைத்து விடுகின்றனர் என்பது போன்ற கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.