• Tue. Apr 23rd, 2024

மதுரை பேராயர் அந்தோணி பாப்பு சாமி கூறிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Byp Kumar

Dec 25, 2022

மழலையாய் மண்மீதிலே வந்துத்த மனுகுல மீட்பரின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்திட காத்திருக்கும் மனுகுலத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வரலாற்று ஏடுகள் ஆவலோடு காதிருந்த கடவுளின் வாரிசு வந்துதித்த மாபெரும் நிகழ்வு பதிவான நாள் தம் மீட்பர் இயேசுவின் பிறப்பு நாள்.
மீட்பரின் வருகையை கணித்த ஞானிகளும், வல்லுநர்களும் ஆவலோடு காத்திருந்த காலம் கனிந்த அற்புதமான நாள். ஒவ்வொருநாளும் எண்னாற்ற குழந்தைகள் பிறந்தாலும் இயேசுவின் பிறப்பு தனித்துவம் மிக்கதாக அமைந்தது..ஆட்சியில் இருந்தோருக்கு அச்சமாகவும் ஏழை எளியோருக்கு மட்டற்ற மகிழ்ச்சியாகவும் இருந்தது. இயேசுவின் பிறப்பால் பெத்லகேம் என்ற சிறிய இடம் உலகம் அறியும். உன்னத இடமாக மாறிப்போனது .இன்றளவும் கூட கிறிஸ்து பிறப்பு விழா அன்று உலக மக்கள் அனைவரும் மனதளவில் பெத்லகேம் சென்று வருகின்றனர். மாடுகள் அடையும் மாட்டுத்தொழுவம் மாட்சிமை பெற்றது ஊருக்கு வெளியே தள்ளப்பட்ட இடையர் கூட்டம் இறையருளை முதலில் பெற்றது.


இன்றும் இயேசு நம் இதயத்தில் பிறக்க இடம் அளிக்க துணிந்துவிட்டால் நம் வாழ்வு புனிதமடையும் சமூக அவலங்கள் சங்கருக்கப்படும். சண்டை சச்சரவுகளுக்கு துணை நிற்போருக்குச் சவுக்கடி கொடுக்கப்படும் தீவிரவாத செயல்பாடுகள் வேரறுக்கப்படும்.புதிதாக பிறந்துள்ள இறைமகனின் அருளால் புத்தாண்டிலே புதிய மாற்றத்தை கொண்டுவருவோம். வழக்கமான நமது கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் இறைவன் கொண்டுவந்த அன்பு அமைதி, சமத்துவம, சகோதரத்துவம் ஏழைகளுக்கு மறுவாழ்வு போன்ற மதிப்புகளை ஒருவர் மற்றவரோடு பகிரவோம். மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.
தோல்விகளை துரத்தி, வெற்றிகளை குவித்து. பகைமை மறந்து. சமூக அநீதிகள் அகற்றி பெண்மையை போற்றி சாதிகளை சாகடித்து, வறுமையை ஒழித்து. வாழ்வாங்கு வாழ்ந்திட, வரங்களை கேட்டு, புதிய ஆண்டிலே வளமோடு வாழ வாழ்த்துகளும் செபங்களும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *