• Sat. Mar 22nd, 2025

இன்று திருநீற்று புதனை (சாம்பல்புதன்) முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் நோன்பு

திருநீற்றுப் புதன், கம்பம் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் நோன்பு தொடங்கினர். இன்று திருநீற்று புதனை (சாம்பல்புதன்) முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்கு வந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டு நாற்பது நாள் நோன்பை தொடங்கினர்.

சாம்பல் புதன் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு தவக்கால விழா ஆகும். நாற்பது நாள் நீடிக்கின்ற தவக்காலத்தின் முதல் நாள் இது. தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். கிறித்தவ விவிலியத்தில் அடங்கியுள்ள புதிய ஏற்பாட்டில் இயேசு நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. இயேசுவைப் பின்பற்றி, கிறிஸ்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும், இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது திருநீற்றுப் (சாம்பல்) புதன். முந்தைய ஆண்டு குருத்தேலை ஞாயிறன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து, சாம்பலாக்கி ஆலயத்தில் வைப்பர். வழிபாட்டின்போது அச்சாம்பல் புனிதப்படுத்தப்படும். பின் ஆலய பங்குத்தந்தையால் கிறிஸ்துவ மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தில் பூசுப்படும்.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்கவிழா இன்றுகாலை நடைபெற்றது. கம்பம் பங்குத்தந்தை பாரிவளன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், புனிதப்படுத்தப்ப சாம்பலை அருட்தந்தை மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தில் பூசினர். இதையடுத்து மக்கள் நாற்பது நாள் நோன்பை தொடங்கினர். நிகழ்ச்சியில், புனித ஆரோக்கிய அன்னை அன்பியம், அன்னை தெரசா அன்பியம், குழந்தையேசு அன்பியம், புனித செபஸ்தியார் அன்பிய இறைமக்கள், மற்றும் கூடலூர், ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப், கருநாக்கமுத்தன்பட்டி இறைமக்கள் கலந்து கொண்டனர்.