• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடவு..,

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதில் ஒன்றாக மரம் வளர்ப்போம் மழை வளம் காப்போம் என்ற பாணியில் சின்னமனூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தெற்கு நகர செயலாளர் முகம்மது சலாம் தலைமையேற்றார் தெற்கு நகர இணைச் செயலாளர் சூரிய வேல் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்தார் தெற்கு நகர பொருளாளர் சுந்தர் துணை செயலாளர் ரஞ்சித் குமார் 17 வது வார்டு செயலாளர் செல்வம் 21 வது வார்டு செயலாளர் ரஞ்சித் கலந்து கொண்டனர் மேலும் தெற்கு நகர இணை செயலாளர் சூரிய வேல் பேசுகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்று முதல் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 52 வகையான மூலிகை செடிகள் மருத்துவமனையில் நடவு செய்துள்ளோம்.

மூலிகை செடிகள் மரங்களாக வரும் காலங்களில் வளரும் போது எண்ணற்ற நன்மைகளை உண்டாக்கும் ஆகையால் தான் நாங்கள் மரக்கன்றுகளை தேர்ந்தெடுத்தோம் நடைமுறைப்படுத்தினோம் என்றார் மரக்கன்றுகள் நடவின் போது தலைமை மருத்துவர் ரா.மகேஷ்வரி செவிலியர் கண்காணிப்பாளர் மருத்துவர் ரேணுகா டாக்டர் நீதி மன்னன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர் அப்போது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.