சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது.
உலகின் முதல் மொழியாம் தமிழ் எல்லா விழாக்களையும் காரணங்களுடன் தான் கொண்டாட கற்றுக் கொடுத்து இருக்கின்றது. அந்த வகையில் சித்திரை ஒன்றாம் தேதி புத்தாண்டான சித்திரை திருநாளாக தமிழர்களின் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சித்திரை முதல்நாளான இன்று பிலவ ஆண்டு விடைபெற்று சுபகிருது புத்தாண்டு பிறந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்கள். சித்திரை மாதத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் மையப்புள்ளியில் வருகின்றது. இது இளவேனிற் காலத்தின் தொடக்கம் இரவு குறைந்து பகல் நேரம் அதிகமாகிறது. இந்த காலத்தில் கொன்றை உள்ளிட்ட மலர்கள் பூத்துக் குலுங்கும். அந்தவகையில் இளவேனிற்காலத்தின் தொடக்க நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வழிபாடு செய்து வருகின்றனர்.அதேவேளை, தமிழ் மக்கள் தங்கள் வீடுகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.